மின் கட்டணத்திற்கு விதிக்கப்படவிருக்கும் புதிய வட்டி!

மின் கட்டணத்திற்கு விதிக்கப்படவிருக்கும் புதிய வட்டி!

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக மின் கட்டணத்தை செலுத்த முடியாத மின் பாவனையாளர்களுக்கு 24 மாத சலுகை காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று (21) செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் தெரிவித்தார்.

கொவிட் சூழ்நிலையால் அவர்கள் மின் கட்டணத்தை தவணைகளில் செலுத்த வேண்டும். அத்துடன் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களின் மாதாந்த தவணைக்கு சிறிய வட்டி வசூலிக்கப்படுமெனவும், வரும் நாட்களில் வசூலிக்கப்படும் வட்டி குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையால் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை மின்சாரசபைக்கு ரூ. 44 பில்லியன் செலுத்த வேண்டியிருந்தது என்றும், மின்சார கட்டணத்தை செலுத்தக்கூடிய மக்கள் கூட தங்கள் மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் கருத்தின்படி, 2030 க்குள் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை 70 சதவிகிதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது,என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.