நாட்டில் டொலருக்கு மூன்று விதமான விலைகள்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் டொலருக்கு மூன்று விதமான விலைகள்!!!

நாட்டில் மூன்று விதமான மாற்று விகிதங்கள் செயலில் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முதலாவதாக அமெரிக்க டொலர் ஒன்றிற்கு மத்திய வங்கி நிர்ணயித்த அதிகாரப்பூர்வ அந்நிய செலாவணி விற்பனை விகிதம். அது தற்போது ரூ.204 ஆக காணப்படுகின்றது. இரண்டாவது மாற்று விகிதம் தனியார் வணிக வங்கிகளால் இயக்கப்படுகிறது. அந்த வங்கிகள் அடிப்படையில், டொலர் ஒன்றின் விலை ரூ. 226 மற்றும் ரூ. 228 இற்கு இடையில் ஆகும்.

இந்த இரண்டு மாற்று விகிதங்களை விடவும் அதிகமாக, டொலர் ஒன்று ரூ.240 மற்றும் ரூ.250 இடையே கொழும்பில் செத்தம் வீதியில் விற்கப்படுகின்றது. இந்த அதிகாரப்பூர்வமற்ற நிதி வர்த்தகத்தில் உரிமம் பெற்ற வணிகங்களும் செயல்படுகின்றன.

முன்பு மத்திய வங்கி விகிதத்தை விட இரண்டு அல்லது மூன்று ரூபாய் அதிகமாக டொலர்களை விற்று வந்தனர்.

நாட்டின் வணிக வங்கிகளும் மத்திய வங்கி விகிதத்தை விட இரண்டு ரூபாய்க்கு டொலர்களை விற்றன.

தற்போது டொலர் பற்றாக்குறை என்பதினால், டொலர் விற்பனைக்கான மூன்று மாற்று விகிதங்கள் தற்போது நாட்டில் செயலில் உள்ளன. மேலும், வர்த்தக வங்கிகள் முன்னோக்கி சந்தையில் டொலர்களை விற்பனை செய்வதற்கு பல்வேறு உயர் விலை விகிதங்களை நிர்ணயித்துள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.