இன்னும் இரண்டே வாரங்களில் நாட்டில் இது நடக்கும்!

இன்னும் இரண்டே வாரங்களில் நாட்டில் இது நடக்கும்!

அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் கொரோனா தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறையும் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.

மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டம் மூலம், தற்போது நோயாளிகளின் பரவலில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது.

சுமார் 9.5 மில்லியன் மக்கள் தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெற்றனர்.

அடுத்த இரண்டு வாரங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு விடும்.

இதையடுத்து அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்து, அதன்மூலம் பிறருக்கு நோய் பரவுதல் குறைவடைந்து நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளை கணிசமாகக் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என அமைச்சர் கூறினார்.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.