பிரபல தேயிலை வர்த்தகர் குலாம் ஹுசைன் கொலை; 9 நிறுவனங்களின் உரிமையாளரான அவரது மகன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல தேயிலை வர்த்தகர் குலாம் ஹுசைன் கொலை; 9 நிறுவனங்களின் உரிமையாளரான அவரது மகன் கைது!


பிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் குலாம் ஹுசைன் எனும் நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது இளைய மகன் சந்தேகத்தின் பேரில் சிஐடியால் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.


உயர்மட்ட தொழிலதிபர் ஷப்பீர் அப்பாஸ் குலாம் ஹுசைன் அவரது 68ஆவது வயதில் 2017 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள அவரது அலுவலக வளாகத்தில் இறந்து நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


இந்நிலையில், 16 ஆகஸ்ட் 2018 அன்று அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அது தொடர்பான விசாரணை சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.


பின்னர், அவரது உடல் 2019 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டு தடயவியல் நோயியல் நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டது.


அதில், அவர் தாடையில் வெடிப்பு மற்றும் உடலின் இடது பக்கத்தில் ஒரு விலா எலும்பு முறிவு என்பன வைத்தியர்களால் கண்டறியப்பட்டது.


அதன்படி, அவரது மரணம் செயற்கையாக நிகழ்ந்தது என்றும் அது ஒரு கொலை என்றும் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.


நீண்ட விசாரணைக்குப் பிறகு, குலாம் ஹுசைன் இயற்கையான காரணங்களால் இறக்கவில்லை, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.


அவரது கொலை தொடர்பாக அதே தொழிலதிபரின் 37 வயதான இளைய மகன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிஐடியினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.


இவர் Adam Expo Ltd. உட்பட 9 நிறுவனங்களின் உரிமையாளரும் ஆவார்.


சந்தேக நபரான மகன் சொத்துக்களை பெறும் நோக்கில் கொலை செய்ததாக சி.ஐ.டி சந்தேகிக்கிறது. 


அவர் இன்று (12) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.