ஈஸ்டர் தாக்குதல்; மௌலவிகள் உட்பட 25 பேருக்கு அழைப்பாணை!

ஈஸ்டர் தாக்குதல்; மௌலவிகள் உட்பட 25 பேருக்கு அழைப்பாணை!


ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மௌலவிகள் உட்பட பிரதிவாதிகள் 25 பேரை ஒக்டோபர் 04ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் இன்று (13) அழைப்பாணை பிறப்பித்தது.


சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தது.


இந்த வழக்குத் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 23,270 குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட தீர்ப்பாயத்தை அமைக்குமாறு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் விடுத்த கோரிக்கையை அமையவே தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.