“தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய இலங்கை தேசிய அணியின் சில வீரர்கள் வேண்டுமென்றே தங்களை முழுமையாக ஈடுபடுத்தவில்லை“ - வெளியானது அறிக்கை!

“தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய இலங்கை தேசிய அணியின் சில வீரர்கள் வேண்டுமென்றே தங்களை முழுமையாக ஈடுபடுத்தவில்லை“ - வெளியானது அறிக்கை!

இலங்கை கிரிக்கட் வாரியத்தின் அறிக்கை


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய இலங்கை தேசிய அணியின் சில வீரர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தவில்லை அல்லது வேண்டுமென்றே களத்தில் சரியாக செயல்படவில்லை என்று குறிப்பிட்ட சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை கிரிக்கட் வன்மையாக மறுக்கிறது.

தேசிய அணியின் எந்தவொரு வீரருக்கும் எதிராக ‘கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து’ இலங்கை கிரிக்கட் அத்தகைய புகாரைப் பெறவில்லை.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை வென்ற ஒருநாள் தொடரில் விளையாடிய அதே அணியினர் டி20 தொடரிலும் பங்கேற்றனர் என்பதை இலங்கை கிரிக்கெட் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது மட்டுமல்லாமல், ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் தரவரிசையில் முக்கிய புள்ளிகளைப் பெற்றது.

இலங்கை தேசிய அணி, கடந்த காலங்களில் இருந்து, முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற்று சரியான திசையில் செல்வதன் மூலம் முன்னேறுகிறது என்பது ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டு ஒப்புக்கொள்ளப்படுகிறது.

எனவே, ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பையை எதிர்கொள்ளவிருக்கும் இலங்கை கிரிக்கட் அணி தொடர்பில், தவறான செய்திகளை பதிவிடாது, ஊடக நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அந்தந்த செய்தி நிறுவனங்களிடம் கோர விரும்புகிறது.

இத்தகைய பொய்யான அறிக்கைகள் மூலம், இலங்கை அணிக்கு கடந்த தொடர்களில் அர்பணிப்பாக விளையாடிய வீரர்களையும் மனதளவில் பாதிக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.