
ஆசிரியர்களுக்கான ரூபா ஐயாயிரம் ஊக்குவிப்பு கொடுப்பனவைப் பெற நிறைவேற்ற வேண்டிய 15 பொறுப்புகள் அடங்கிய புதிய சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
ஒன்லைனில் அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல், க.பொ.த உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தல், பாடசாலையில் நடைமுறையிலுள்ள விஷேட திட்டங்களுக்கு பங்களிப்பு, கடமைத் தேவைகள் குறித்த கூட்டங்களில் கலந்துகொள்வது, புதிய தேசிய பாடசாலை தொடர்பான செயற்பாடுகள், தடுப்பூசி செயற்றிட்டம் மற்றும் பாடப் புத்தக விநியோகம் ஆகியவை உட்பட 15 பொறுப்புகளை குறித்த சுற்றறிக்கை பட்டியலிட்டுள்ளது.
அதிபர்கள் தங்கள் கடமைகளில் திருப்தி அடைந்தால், சம்பந்தப்பட்ட ஊக்குவிப்புத் தொகையை வழங்க வலயக் கல்வி பணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊக்குவிப்புத் தொகையைப் பெறத் தகுதியுள்ள அதிபர், ஆசிரியர்களுக்கு அதனைச் செலுத்தும் அதிகாரம் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.