சுமார் ரூ. 14 லட்சத்துடன் காணாமல் போயுள்ள அதிவேக நெடுஞ்சாலை காசாளர்!

சுமார் ரூ. 14 லட்சத்துடன் காணாமல் போயுள்ள அதிவேக நெடுஞ்சாலை காசாளர்!


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம இடைச்சாலையின் பணிபுரிந்த காசாளர் ஒருவர் ரூ.14 லட்சம் பணத்துடன் காணாமல் போயுள்ளார்.


குறித்த அந்த இடத்தில் பணப் பொறுப்பில் இருந்த தலைமை காசாளர் பணத்துடன் காணாமல் போயுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலையின் தலைமை பொறியாளரால் பண்டாரகம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக லங்கதீப செய்தி வெளியிட்டுள்ளது.


முதற்கட்ட விசாரணையில் 14 லட்சத்து 18 ஆயிரம் ரூபா காசாளர்களின் பாதுகாப்பு மற்றும் தினசரி வைப்புப் பெட்டியில் இருந்து திருடப்பட்டது தெரியவந்துள்ளது.


மேலும் காணாமல் போன தலைமை காசாளர் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.