
12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட விசேட தேவைகளையுடைய சிறுவர்களுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் பைசர் தடுப்பூசியை செலுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர்கள் மருத்துவமனையில் துவங்கி வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.