11 பேரை பிரதிவாதியாக வைத்து நீதிமன்றம் சென்ற நடிகர் விஜய்!

11 பேரை பிரதிவாதியாக வைத்து நீதிமன்றம் சென்ற நடிகர் விஜய்!

தமிழ் நாட்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தமது பெயரை பயன்படுத்தக் கூடாது எனக் கோரி நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் தந்தையான சந்திரசேகர், தாய் உட்பட 11 பேரை பிரதிவாதியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் புதிததாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 06, 09 ஆம் திகதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் நடிகர் விஜய்யின் பெயரை, மக்கள் இயக்கத்தை பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை குடிசார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.