உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ள 'மெனிகே மகே ஹிதே' பாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ள 'மெனிகே மகே ஹிதே' பாடல்!


இலங்கை பாடகர்களான யோஹானி மற்றும் சதீஷனின் 'மெனிகே மகே ஹிதே' பாடல் உலகளாவிய தரவரிசையில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது.


இந்த வாரம் யூடியூப் உலக தரவரிசையில் இந்த பாடல் 7 ஆவது இடத்தில் உள்ளது. இந்த பாடல் கடந்த வாரம் 6 வது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


அதேநேரம் இந்த பாடல் யூடியூபில் 116 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.


இந்தியாவின் பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சன் இந்த பாடலுக்கு எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோவை அவரது சமூக வலைத்தள பக்கங்களின் பகிர்ந்த பிறகு இந்தப் பாடல் மொத்த இந்தியாவின் கவனத்தை மேலும் ஈர்த்தது.


அமிதாப் பச்சனின் பேத்தியான நவ்யா நவேலி நந்தா தனது பிரபல திரைப்படமான காலியாவின் நடன வரிசையைத் திருத்தியதாகவும், அசல் பாடலான 'ஜஹான் தெறி யே நாசர் ஹை' வீடியோவில் 'மெனிகே மகே ஹிதே' பாடலை எடிட்டிங் செய்ததாகவும் பச்சன் கூறியிருந்தார்.


இதன்பின்னர் நடிகர்களான டைகர் ஷெராஃப், மாதுரி தீட்சித், ப்ரணீதி சோப்ரா, இசைக்கலைஞர் சோனு நிகம் மற்றும் இந்திய இசையமைப்பாளர் யாஷ்ராஜ் முகதே ஆகியோர் 'மணிகே மகே ஹிதே' பாடலுக்கு நடனமாடி இருந்தனர்.


மேலும், இந்தியாவின் பிரபல விமான சேவையான இண்டிகோ விமான சேவையின் பணிப்பெண் ஒருவரும் இந்த பாடலுக்கு நடனமாடியிருந்தார்.


இந்நிலையில், உலகெங்கிலும் பல்வேறு மொழிகளில் இந்த பாடல் பதிவு செய்யப்பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.