
சமூக ஊடகங்களில் பதிலளித்த அவர், சுதந்திர தொலைக்காட்சி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் செய்திகளை இனி பார்க்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
“நீங்கள் இதனை பொறுப்புடனா கூறிகின்றீர்கள்?
அரச தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்கள் இவ்வாறு அரசின் சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் அவர்களின் தொழிலுக்கு அச்சுறுத்தலாக அமையுமா?
நீங்கள் அவர்களுக்காக இதனை பொறுப்பு கூறுவீர்களா? இல்லையெனில் அவர்கள் தொழில் இழந்து வீடுகளுக்கு தான் செல்ல வேண்டும்.
ITN மற்றும் ரூபவாஹினி அலைவரிசையினை பார்க்க முடியாதளவு இன்று மாறியுள்ளதன் காரணம், நீங்கள் செல்லுமிடங்கள் மற்றும் சாப்பிடுவது போன்றவற்றை மக்கள் பார்ப்பதற்கு எந்தவித தேவையும் இல்லை.
அப்படியே நாட்டில் உண்மை நிலையினை அறிக்கையிட அராஅ தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சக்தி மற்றும் தைரியத்தினை வழங்க பிரார்த்திக்கின்றேன்”
(யாழ் நியூஸ்)
