ஐபிஎல் போட்டிகள் விளையாடுவதினால் வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மாந்த ஆகியோருக்கு இலங்கை அணி பங்கேற்கும் போட்டிகளில் பங்கேற்க இயலாது!

ஐபிஎல் போட்டிகள் விளையாடுவதினால் வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மாந்த ஆகியோருக்கு இலங்கை அணி பங்கேற்கும் போட்டிகளில் பங்கேற்க இயலாது!

இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 இல் பங்கேற்க தேசிய வீரர்கள் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

வீரர்களுக்கான அனுமதி தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து வழங்கப்பட்டதால இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் 15 முதல் (இலங்கை தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடிந்ததைத் தொடர்ந்து) ஐபிஎல் போட்டிகளுக்க தமது அணியில் சேர இருவருக்கும் 'தடையில்லா சான்றிதழ்' வழங்கப்பட்டது.

ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு முன்னதாக இரண்டு வீரர்களும் 2021 ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை அணியில் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவார்கள்.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றால் இரு வீரர்களும் ஐபிஎல் பிளேஆஃபில் விளையாட முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. 

இரு வீரர்களும் ஓமான் அணியுடனான இரு டி20 போட்டி சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியில் பங்கேற்க இயலாமல் போகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.