டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு மேலுமொரு பதக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு மேலுமொரு பதக்கம்!


டோக்கியோ பரா ஒலிம்பிக் 2020 போட்டிகளில் F64 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சமித்த துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதன்போது அவர் 65.61 மீற்றர் எனும் பெறுதியை பதிவு செய்தார்.

சமித்த துலான் கொடிதுவக்கு, கடந்த 2019 இல் துபாயில் இடம்பெற்ற உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் 4ஆவது இடத்தை பெற்றதோடு, 2018 ஆசிய பரா விளையாட்டு தொடரில் வெண்கல பதக்கத்தை பெற்றிருந்தார்.

அதற்கமைய, 2020 பரா ஒலிம்பிக்கில் இலங்கை இதுவரை ஒரு தங்கம் உள்ளிட்ட இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.

இன்றையதினம் இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த ஹேரத், டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் F46 பிரிவில் புதிய உலக சாதனையுடன் (67.79m) இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பதிவு செய்திருந்தார்.

தங்கப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஆணைப் பத்திரம் வழங்கும் அதிகாரியாக இன்று பதவி உயர்த்தப்பட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் அவருக்கு இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அவர் நாட்டுக்கு வழங்கிய கௌரவத்தை பாராட்டும் வகையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.