ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இவ்வறிவிப்பை வெளியிட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மே மாதத்தில் அவிஷ்கா குணவர்தன மீதாம இரு ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்ததாகவும், அவர் கிரிக்கெட் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுவதாகவும் அறிவித்தது.
இவர் ஆறு டெஸ்ட் மற்றும் 61 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார், அவர் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் குழுவில் செயல்பட்டுவந்தார்.
ஆப்கானிஸ்தான் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான் போராளிகள், முன்பு இருந்ததைப் போலவே கிரிக்கட் இனை தொடரலாம் என்று அறிவித்திருந்தனர். (யாழ் நியூஸ்)