சுய-தனிமைப்படுத்தல் : நாட்டில் 31 நகரங்களில் வணிக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

சுய-தனிமைப்படுத்தல் : நாட்டில் 31 நகரங்களில் வணிக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் காரணத்தினால் மேலும் 15 நகரங்கள் வணிக நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக லங்கதீபா பத்திரிகை தெரிவித்துள்ளது.

திருகோணமலை நகர மற்றும் மாநகர சபை, கேகாலை, சிலாபம், அம்பாறை, வென்னப்புவ, கெக்கிராவ, மொனராகலை, திவுலபிட்டிய, தெரணியகல, ஓர்கஸ்மாங்கந்திய்ந், வாத்துவ, பந்துரங்கொடை, ரிகிலகஸ்கட, மற்றும் அலவ்வ மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் கொடிகாமம் ஆகிய பிரதேசங்களில் வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கு முன்பாக , கம்பஹா, அம்பலாந்தோட்டை, அம்பலங்கொடை, மரதகஹாமுல, வேயங்கொடை, தங்கொட்டுவ, சேருநுவர, பலாபத்வல, உல்பத, தங்காலை, பதுளை, பலாங்கொடை, வலப்பனே, பண்டாரவளை, எம்பிலிப்பிட்டிய மற்றும் மாத்தளை பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

சில பகுதிகளில் ஒரு வாரத்திற்கு கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் இரு வாரங்களுக்கும், மேலும் சில இடங்களில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மொத்தம் 31 நகரங்கள் இதுவரை வணிக நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.