
இதன்படி முதலாவதாக அவசியமற்ற ஒன்றுகூடல்களை, விழாக்களை தவிர்த்துக்கொள்ளுதல். அவசியமின்றி வீடுகளுக்கு வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வணக்கஸ்தலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளை உட்பிரகாரங்களில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மட்டுமே நடாத்த அனுமதி வழங்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக பல ஆலயங்களில் நடந்த திருவிழாக்கள் மூலம் கொரோனா தொற்று மிக வேகமாக பரவியதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இரண்டாவதாக பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்கின்ற வேளைகளில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும். முகக்கவசங்களை சரியான முறையில் அணிந்திருக்க வேண்டும். கைகளை கிரமமாக தொற்று நீக்கம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
மூன்றாவதாக பொதுமக்கள் கட்டாயமாக தமக்குரிய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்
இனிமேல் வைத்தியசாலைகளுக்கும், பொது இடங்களுக்குச் செல்வதற்கும், பொது போக்குவரத்துகளில் பயணிப்பதற்கும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாயமாக்கப்படலாம். எனவே இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.