அமைச்சின் கட்டிடத்திற்கு மாதமொன்றுக்கு ரூ.39 இலட்சம் வாடகை - பிரதமரால் முன்மொழிவு

அமைச்சின் கட்டிடத்திற்கு மாதமொன்றுக்கு ரூ.39 இலட்சம் வாடகை - பிரதமரால் முன்மொழிவு

 
பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திற்கு ஒரு கட்டிடத்தின் இரு மாடிகளுக்கும் மாத வாடகையாக ரூ. 39 இலட்சம் பெற முன்மொழியப்பட்டது.

கொழும்பு 10 டி.பி ஜாயா மாவத்தையில் உள்ள ஒரு கட்டிடத்தின் இரண்டு தளங்களை வாடகைக்கு எடுக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

வாடகை வரி இல்லாமல், மூன்று மாத வாடகைப்பணத்தினை முன்கூட்டியே செலுத்த முன்மொழியப்பட்டது.

இந்த கட்டிடம் பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகை அருகில் அமைந்துள்ளதால் அமைச்சகத்தை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கட்டிடத்தில் ஏற்கனவே இரு இராஜாங்க அமைச்சகங்கள் நிறுவப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.