இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 534 ரக விமானம், மொஸ்கோவ் நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 51 பேரும் இலங்கைத் தூதுவரும் வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் வாரந்தோறும் இரவு 10.20 மணிக்கு மொஸ்கோவ் நகரில் இருந்து புறப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.