ரிஷாட்டின் மனைவியின் பிணை மனு மறுப்பு!!

ரிஷாட்டின் மனைவியின் பிணை மனு மறுப்பு!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் செப்டெம்பர் 06ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, இன்று உத்தரவிட்டார்.

மேலும் ரிஷாட்டின் மனைவி மற்றும் மாமனார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையும் நீதவான் நிராகரித்தார். 

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை - டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மைத்துனர், சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.