தடுப்பூசியை அழிக்கும் புதிய வகை கொரோனா திரிபான “எப்சிலான்” இலங்கையில் என்று அச்சம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடுப்பூசியை அழிக்கும் புதிய வகை கொரோனா திரிபான “எப்சிலான்” இலங்கையில் என்று அச்சம்!

டெல்டா வைரஸை விட 20 சதவிகிதம் வேகமாக பரவும் மற்றும் இருக்கும் தடுப்பூசிகளை எதிர்க்காத கொடிய “எப்சிலான் வைரஸ்” விரைவில் இலங்கையை அடையும் அபாயத்தில் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா வைரசின் 4 வது அலை தொடங்கிய பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து இந்த மாறுபாடு அறிக்கையிடப்பட்டதன் மூலம் அது இன்று அல்லது நாளையும் இலங்கைக்கு வரும் ஆபத்து அதிகரித்துள்ளது என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

எப்சிலான் வைரஸ் திரிபு உள்ள மூன்று புதிய பிறழ்வுகள் தற்போதுள்ள தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை 70 சதவிகிதம் வரை பலவீனப்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும் அவை இயற்கையாக நிகழும் நோய் எதிர்ப்பினை அழிக்கும் தகைமை இருப்பதினால், அவை மிகவும் ஆபத்தானவை என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கின்றது.

CAL.20C அல்லது கலிபோர்னியா மாதிரி அல்லது B.1.429 என அழைக்கப்படும் மூன்று முக்கிய பிறழ்வுகள், தெற்கு கலிபோர்னியாவிலிருந்து 2020 இல் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இரண்டாவது மிகவும் பிரபலமான மாறுபாடு இதுவாகும். மேலும் பின்னர் பாகிஸ்தானின் லாஹோர் நகரில் பரவி, இப்போது அது ஹிமாச்சல் பிரதேசம் வழியாக இந்தியாவை அடைந்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.