ட்விஸ்ட் கொடுத்த ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே!

ட்விஸ்ட் கொடுத்த ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இந்த நிலையில் துணை அதிபர் அம்ருல்லா சாலே டுவிட்டரில் அதிரடி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘நான் ஒன்றை விளக்க இருக்கிறேன். ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர் இல்லை என்றால், நாட்டை விட்டு ஓடிவிட்டால், ராஜினாமா செய்து விட்டால் அல்லது காலமானால் துணை அதிபர்தான் காபந்து அதிபராவார். நான் தற்போது நாட்டிற்குள்தான் இருக்கிறேன். சட்டப்படி நான்தான் காபந்து அதிபர். அனைத்து தலைவர்களிடமும் ஆதரவையும் ஒருமித்த கருத்தையும் பெற நான்அவர்களை அணுகி வருகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.


தலிபான்கள் மிகப்பெரிய அளவிற்கு சண்டையிடாமல் ஆட்சியை பிடித்த நிலையில் , துணை அதிபரின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.