காபூலில் என்ன நடக்கின்றது என்று பார்வையிட சென்ற பாகிஸ்தான் சாரதி, அமெரிக்கா சென்ற சம்பவம்!

காபூலில் என்ன நடக்கின்றது என்று பார்வையிட சென்ற பாகிஸ்தான் சாரதி, அமெரிக்கா சென்ற சம்பவம்!

 ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையத்தில் குழப்பம் மற்றும் துயரங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற பாகிஸ்தான் பெஷாவர் நகர லொரி சாரதி ஒருவர் செய்த விடயம் ஒன்றினை பற்றி, முன்னாள் நெதர்லாந்து அமைச்சர் ஜோராம் வான் கிளவேர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

அவரது முகநூல் கணக்கில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

“நம்பினால் நம்புங்கள், பெஷாவரில் இருந்து காபூல் நோக்கி வந்த லொரி சாரதி ஒருவர் மூன்று நாளாக காணாமற் சென்றிருந்தார்”. மேலும் அவர் தெரிவித்ததாவது, அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் நினைத்ததுள்ளார்கள்.

சமூக வலைதளங்களில் இவரது சம்பவம் வைரலாக பரவியுள்ளது. பாகிஸ்தான் லேண்டி கொட்டல் பிரதேசத்தை சேர்ந்த அசாத் ஷின்வாரி என்பவரான இவர் பெஷாவரில் இருந்து காபூல் நோக்கி லொரி ஓட்டிச் செல்வர் ஆவார். இவர் காபூல் இல் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு காபூல் விமான நிலையத்தினுள் சென்றுள்ளார்.

குறித்த சாரதி, மூன்று நாட்களுக்கு பின்பு தனது குடும்பத்திற்கு தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு தான் அமெரிக்காவில் இருப்பதாக தெரிவித்ததாக அமைச்சர் அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காபூல் விமான நிலையத்தினுள் என்ன நடக்கின்றது என்று பார்வையிட சென்ற சாரதி, எதேர்ச்சையாக மக்களுடன் மக்களாக விமானத்தினுள் ஏரி அமெரிக்கா சென்றுள்ளார்.

இவ்வாறு பலர் காணமற் சென்று, உலகில் வெவ்வேறு பாகங்களுக்கு சென்றுள்ளதாக அறிய முடிந்ததாக தெரிய வந்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.