முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்பை இழக்கச் செய்யும் முஸ்லிம் கட்சிகள்!

முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்பை இழக்கச் செய்யும் முஸ்லிம் கட்சிகள்!


இலங்கை அரசியல் யாப்பின் சர்சைக்குரிய 20ஆம் திருத்தச் சட்டமூலம் சம்பந்தமாக கடந்த காலங்களில், முஸ்லிம் கட்சிகள் சம்பந்தமாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. 

இறுதி நேரத்தில் இது சம்பந்தமாக முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் இதை கைக்கொண்ட விதம் முஸ்லிம் சமூகத்தை அன்னிய சமூகங்களிடையே அரசியலில் ஒரு கேவலமான நிலைக்கு தள்ளியது.

கடந்த 20 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆதரவாக வாக்களித்த போது இதில் ஏற்பட்ட சிக்கலான நிலவரத்தை சமாளிப்பதற்காக கட்சித் தலைமைகளால் பல்வேறு விதமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

கட்சியின் தலைமை பீடத்தின் உத்தவை மீறி அங்கத்தவர்கள் செயல்பட்டனர்.

கட்சியின் நிலைப்பாட்டை மீதி செயல்பட்ட உறுப்பினர்களிடம் தனித் தனியான விளக்கம்.

ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தலைவர் கிழக்கு  விரைந்தார். கொரோனா காரணமாக காரணமாக  ஒழுக்காற்று நடவடிக்கை பின் போடப்பட்டது போன்ற நாடகங்களை இவர்கள் அரங்கேற்றினார்கள். ஆனால் இதன் உண்மைத்தன்மையை உறுப்பினர்களான ஹரிஸ், நஸிர் போன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் இதேவேளை தற்போது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து முஸ்லிம் அரசியலில் இருந்து விளக்கப்பட வேண்டும் என, மக்கள் எதிர்பார்த்த உறுப்பினர்களுக்கு தற்போது பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.  இவ்வாறான நடவடிக்கை இவர்களின்  அரசியலில் பின்புலம் உள்ள கொடுக்கல் வாங்கல்களை சித்தரிதுக் காட்டுகின்றது.

இவர்களை பொருத்தவரை இதுவரையில் இவர்களின் அரசியலை பொறுத்தவரை
சமூகம், சமூகத்தின் நலன் என்ற உணர்வை கருத்தில் கொண்டு எத்த முடிவுகளும் எட்டப்பட வில்லை. அதனால் ஆதரவு தெரிவிப்பதும் எதிர்த்து  நிற்பதும் இவர்களின் அரசியல். ஆனால் இன்னும் ஆண்டாண்டு காலம் இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் சமூக அரசியல்,  ஏனைய சமூகத்துடனான புரிந்துணர்வு போன்றவற்றுடன் வாழ வேண்டும்.

எனவே இவர்களின் சுய லாபத்தைக் கொண்ட அரசியல் செய்யாமல் வருங்கால சமூகம் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழும் நிலையை வைத்து விட்டுச் செல்ல வேண்டும்

முஸ்லிம் சமூகத்தை அடிப்படையாக வைத்து இவர்கள் மேற்கொள்ளும் அரசியல் வியாபாரத்தினால், இன்று அரசியலில் முகவரி அற்றுக் கிடக்கும் முஸ்லிம் சமூகத்தை இன்னும் படுபாதாளத்தில் தள்ளும் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் தனித்துவம் காப்போம் என, முஸ்லிம் கட்சிகள் என்று  தனியாக ஆரம்பிக்கப்பட்டதோ அன்று முதல் இனவாதிகள் இதை ஒரு சந்தர்ப்பமாக தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறார்கள்.

முஸ்லிம்கள் நம்பிக்கையற்றவர்கள், பொல்லாதவர்கள், துரோகிகள், என தற்போது இனவாத அரசியல் வாதிகளால் வர்ணிக்கப்படும் நிலையில், இவர்களின் இவ்வாறான தெளிவான மாறுபட்ட  நடவடிக்கை அவர்களுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைகின்றது.

இவர்களின் சுயநலம் கொண்ட இவ்வாறான  அரசியல் நடவடிக்கைகள் பல்வேறுபட்ட  சமூகத்தின் மத்தியில் ஒன்றாகக் கலந்து வாழும் முஸ்லிம் சமூகம் இவ்வாறான ஒரு தலைகுனிவுகும், ஒரு நம்பிக்கை தன்மையற்ற சமூகம் என்ற ஒரு பெயரை ஏற்படுகி தருகின்றது என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் மட்டத்தில் மட்டும் தொடர்பைக் கொண்டுள்ள அரசியல்வாதிகள், முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம் மக்களை தம் அளவில் மட்டும் எடைபோடாமல் ஏனைய சமூகத்தின் மத்தியில் முகங்கொடுக்க சிரமப்படுவதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் என்ற பெயரில் இவ்வாறான அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், முஸ்லிம் சமூகம்  உரிமைகளை இழந்ததே தவிர, இவர்களால் முஸ்லிம்களுக்கு எந்த உரிமையும் பெற்றுக் கொடுக்கப்படவும் இல்லை, இருக்கும் உரிமைகளை காப்பாற்றிக் கொடுக்கவும் இல்லை, எனவே இவர்களின் இவ்வாறான வங்குரோத்து நம்பிக்கையற்ற துரோகத்தனமான அரசியலை முஸ்லிம் சமூகம்  சந்திக்க வேண்டும்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.