
இது தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு பிரதான வீதி முடங்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் , அதனை மீறி செயற்பட்டமையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு 10 வாகனங்களும் பொலிஸாரின் பொறுப்பிலெடுக்கப்பட்டுள்ளன.
சட்ட விரோத மக்கள் ஒன்று கூடலில் கலந்து கொண்டமை, பிரதான வீதியை முடக்கியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.