கொரோனா தொற்றினால் வீதிகளில் மக்கள் இறந்து கிடக்கும் நிலைமை!

கொரோனா தொற்றினால் வீதிகளில் மக்கள் இறந்து கிடக்கும் நிலைமை!

இன்னும் சில வாரங்களில் கொரோனா தொற்றுக்கு இலக்கான மக்கள் வீதிகளில் இறக்கும் சூழ்நிலையில் நாடு இருக்கும் என்று அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கம் புறக்கணிப்பதால் இந்த நிலைமை ஏற்படும் என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஆனது, ஒரு பயங்கரவாதி அல்லது அரசுக்கு எதிரான சதி அல்லது விரோத அச்சுறுத்தல் அல்ல என்பதனால் இராணுவம் இவற்றை பொறுப்பேற்க முடியாது என்றும் இக்காலகட்டத்தில் அறிவியல் அணுகுமுறை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றாளர்களின் நிலை மோசமடைந்து வருவதாகவும், சுகாதார ஊழியர்களுக்கு இதனை தாங்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

நாடு சிறிது காலம் மூடப்பட வேண்டும் என்றும் தற்போதைய செயலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் வேலை செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
டாக்டர் கிஷாந்த தசநாயக்க

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.