
இந்த தினசரி இறப்புகளில் தடுக்கக்கூடிய இறப்புகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக என்று அதன் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று தொற்றாளர்கள் இனங்காணப்படுவது, தானே முன் வந்து வருபவர்களேயன்றி அரசினால் இனங்காணப்படுபவர்கள் அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, தற்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதை விட சமூகத்தில் நான்கு முதல் ஐந்து மடங்கு தொற்றாளர்கள் இருப்பதாக தெரிவித்தார்.
தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காட்ட அரசாங்கத்தின் சில பிரிவுகளின் அறிவற்ற நடத்தை காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுத்தாக அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)