நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
இதன்படி, ஒன்லைன் ஊடாக நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவை கலந்துரையாடலின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கான அபராதத் தொகை முன்னதாக 25 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட நிலையிலேயே, அதனை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிர்ணய விலையை மீறி பல்வேறு நபர்கள் பொருட்களை விற்பனை செய்வதாகவும், இதனால் தாம் மேற்கொண்ட தீர்மானதமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.