
ஈரான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தூதகர்களுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ஆறு மாத காலத்திற்கு எரிபொருளுக்கு கடன் ஒப்பந்தத்திற்காக சுமார் 2 பில்லியன் டொலர்கள் தேவைப்படும், ஆனால் எரிபொருளைப் பெற்று விற்கவும் ஆறு மாதங்களில் பணம் செலுத்தவும் முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும், உலக சந்தையில் எரிபொருளின் விலை சிறிது குறைவடைந்தும் உயர்ந்தும் வருவதாக இருந்தாலும், எரிபொருள் விலை நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் அளவுக்கு குறைவடையவில்லை என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)