
SA 222V, SA 701S மற்றும் SA 1078S ஆகியவற்றின் மரபணு குறியீடுகளில் மாற்றம் அடைந்த டெல்டா வகைகள் நாட்டில் பரவி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமண தெரிவித்துள்ளார்.
டெல்டா வகை திரிபானது மற்ற வகைகளை விட 60-70% வேகமாக பரவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று (17) பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களை வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். (யாழ் நியூஸ்)