கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் மருத்துவர் ஜனான்!

கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் மருத்துவர் ஜனான்!


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை (18) காலை பதிவாகியுள்ளது.

ராகமை வைத்தியசாலையில் பணியாற்றிவந்த மொஹமட் ஜனான் என்ற மருத்துவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் தொற்று ஏற்பட்டதை தெரிந்து தாம் பணியாற்றிய அதே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த இந்த மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன்னதான தொற்று உக்கிரநிலையை அடைந்ததினால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.