ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு - இடைக்கால தலைவர் நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு - இடைக்கால தலைவர் நியமனம்!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்குள் தலிபான் கிளர்ச்சியாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நுழைந்தனர். அதனால் அந்த நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டிலிருந்து வெளியேறி தஜிகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி கனி தஜிகிஸ்தானுக்கு சென்றுவிட்டார் என்று ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்ரப் கானியின் நிலை பற்றி எதுவும் சொல்ல முடியாது” ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 11 அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்க தலைமையிலான படைகளால் வீழ்த்தப்பட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகளால் தமது வசம் கொண்டு வருகின்றனர். அதனால் அந்த நாட்டிலிருந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தங்கள் தூதரகத்திலிருந்து உலங்கு வானூர்தி மூலம் வெளியேற்றப்பட்டனர்.

தலிபான் போராளிகள் “எல்லா பக்கங்களிலிருந்தும்” தலைநகரை அடைந்தார்கள் என்று ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் கூறினார்.

ஆனால் சண்டைகள் எதுவும் இல்லை என்றும் புறநகரில் காத்திருப்பதாகவும் மேற்கத்திய ஆதரவு அரசுடன் அமைதியான பேச்சு நடத்தி வருவதாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார்.

“அமைதியான மற்றும் திருப்திகரமான அதிகார பரிமாற்றம் ஒப்புக் கொள்ளப்படும் வரை காபூலின் அனைத்து நுழைவாயில்களிலும் தலிபான் போராளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இரு தரப்பு பிரதிநிதிகளும் ஞாயிற்றுக்கிழமை கத்தாரில் சந்திக்க உள்ளதாக காபூல் பேச்சு குழுவின் உறுப்பினர் பௌஸி கூஃபி ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
இந்த விடயத்தை நன்கு அறிந்த ஒரு ஆதாரம் அவர்கள் அதிகார மாற்றத்தை பற்றி விவாதிப்பார்கள் என்றும் அமெரிக்க அதிகாரிகளும் இதில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.