கொரோனா தொற்று; கம்பளையில் 5 மாத சிசு உயிரிழப்பு!

கொரோனா தொற்று; கம்பளையில் 5 மாத சிசு உயிரிழப்பு!


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணின் ஐந்து மாத சிசுவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையின்  சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.


கம்பளையை சேர்ந்த அந்தப் பெண், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


இதன்போது, அந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்துள்ளதாகவும் சத்திர சிகிச்சை மூலம் சிசு அகற்றப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.


மரணமடைந்த சிசுவின் தகனம் இன்று மாலை கம்பளை மயானத்தில் நடைபெற்றது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.