
ஏனெனில், இவ்வுலகில் நடைபெறும் அனைத்தும் "நிம்மதிக்காவே அன்றி வேறில்லை" எனலாம்..
ஆனாலும், இதனுள் ஒரு சிலரின் புரிந்துணர்வற்ற, ஒழுங்கற்ற ஒழுக்கவீனமான செயற்பாடுகளினால் சிலர் மன முதிர்ச்சியடைந்து தைரியபட்டாலும் பலரோ சாய்ந்து வீழ்கின்றனர், தன்னுடைய பாதையை விட்டும்..
இவையனைத்தையும் ஒரு குவளைக்குள் வைத்து வெவ்வேறாய் பிரிக்கின்றேன், அதை சுருக்கமாய் எடுத்துரைக்குகிறேன்..
விடயத்திற்குள் வாருங்கள்.
முதல் உள்ளம்: தான் எந்நிலையிலும் தளராமல் நின்று சாதிக்க துடிக்கும். இந்த உள்ளங்களை பொறுத்த வரை பிறரின் கேலிக் கூத்துக்களுக்கு இடமில்லை. தான் உயர வேண்டும் என்ற உயரிய இலட்சிய தாகத்தை கொண்டவர்கள். பிறர் கேலி செய்யும் போது அவர்களின் உள்ளத்தில் இருப்பது "நான் உயர வேண்டும், அதற்கு இவர்களின் கேவலமான நையாண்டிகளும் நச்சரிப்புகளும் எனக்கு உத்வேகமே தவிர, உபத்திரமல்ல" என்று தன்னை வலுப்படுத்தி கொள்வர்..
இரண்டாவது உள்ளம்: இதற்கு அப்படியே மாற்றமானது. அனைத்திலும் சோர்வு. எனினும் சில நேரம் தன்னை வலுப்படுத்தி பயணிக்கின்ற போது, அங்கே இடையில் வழி மறித்து சில எதிர்ப்புகள் வருமாக இருந்தால் தன்னை நொந்து கவலைப்பட்டே காலத்தை கழிப்பர் "என்னை எதிர்க்கின்றனர், நீயெல்லாம் எங்கு வளர போகின்றாய்" என்ற இந்த சின்ன சில்லரை வார்த்தையை நினைத்து நினைத்து தன்னை கல்லறைக்குள் உட்புகுத்துகின்றனர்..
மூன்றாவது உள்ளம்: இவையிரண்டை விட்டும் வேறுபட்டது. இந்த மூன்றாம் பிரிவில் இரு பிரிவுகளை இணம் கண்டுள்ளேன்..
அதில் ஒன்று, நல்ல நிலைக்கு வர ஆசையிருந்தும் அதற்கான அமைப்பு இல்லை.
இரண்டு, நல்ல அமைப்பு இருந்தும் ஆசையில்லை..
முதலாவதை சற்று விளக்குகிறேன் சற்று கவனமாக கேளுங்கள், இச் சமூகம் செல்வாக்கு உள்ளவர்களை மட்டுமே உயர்த்தி நிற்கின்றது. ஏழைகளையும் கவனியுங்கள், அவர்களுக்கும் பல்லாயிரம் ஏக்கங்களும் கனவுகளும் உண்டு. இங்கு ஒவ்வொரு ஊர் தலைவர்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள் கவனம் எடுத்து உதவி செய்யுங்கள்.
இன்னுமொரு விடயம் என்னவென்றால், தன்னிடம் ஆர்வமிருந்தும் அதனை ஒத்துழைக்காமல் முழுக்க எதிர்க்கின்றன சில வீடுகள். இந்த விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்..
"உங்கள் பிள்ளைகளிடம் ஆற அமர்ந்து பேசுங்கள். ஆசைகளை பற்றி அலசுங்கள். இலட்சிய பாதையில் இதமாக பயணிக்க வையுங்கள். ஒவ்வொரு வாலிப நெஞ்சங்களிலும் ஏதோ ஒன்று உள்ளது, அதனை கண்டறியுங்கள்"
மூன்றாவதின் இரண்டாவது பிரிவானது, நல்ல அமைப்பு இருந்தும் ஆசையில்லை..
இதனை பொறுத்த மட்டில் பெரிய வீடு, வசதி, ஊருக்கே விருந்தளிக்கும் அளவு செல்வமிருந்தும் தன்னுடைய குழந்தை செல்வம் ஓர் நோக்கத்தோடும் இல்லாதிருப்பதை நினைத்து வருத்தப்படுகின்றனர், சில பெற்றோர் மன நோயாளிகளாக கூட மாறியும் இருக்கின்றனர்.
பெற்றோர்களுக்கு கூறும் விடயம் யாதெனில், இவ்விடயத்தில் என் இறைவனிடத்தில் உங்கள் பிள்ளைக்காக பிரார்த்திப்பதோடு பிரேத்தியேகமாக நேரத்தை ஒதுக்கி பேசுங்கள், வெறுமனே "சும்மா" பேசாமல் நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேசுங்கள் தந்தையாகவோ, தாயாகவோ, ஆசிரியராகவோ, உறவினர்களாகவோ அல்ல, ஓர் நல்ல நண்பனாக பேசுங்கள்..
இத் தலைப்பை பற்றி அதிகம் பேச வேண்டும், விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். இற்றைய காலத்தில் வாலிபர்களுக்கும் யுவதிகளுக்கும் வீட்டிலும் நாட்டிலும் நடக்கும் அநியாயங்களை பார்க்கும் போது எழுதாமல் இருக்க முடியலிலல்லை..
வாலிபர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தொகுத்து, தீர்வுகளையும் கொடுத்து சிறு கையேடு புத்தகமாக மிக விரைவில் வெளியிடவுள்ளோம், பிராத்தனைகளை எதிர்பார்த்து விடை பெற்று விடுகிறேன், அடுத்த சந்திப்பு வரை..
இறைவன் எம்மை நேரான வழியில் செலுத்தட்டும்!
நன்றிகள்,
பேரன்புடன்,
றஜா முஹம்மத்©
07th Article in Tamil
2021© All Copyrights Reserved
சிந்தனை & எழுத்து : Rajaa Muhammadh
2021© All Copyrights Reserved
சிந்தனை & எழுத்து : Rajaa Muhammadh