
தடுப்பூசியின் முதல் டோஸை கூட பெறாத பேருந்து பயணிகளிடம் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் அறவிடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை (01) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து ஆரம்பிக்கவுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேருந்தில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையை உறுதி செய்யும் அட்டையின் பிரதியை பயணிகள் கையில் வைத்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.