தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் மாவனல்லை பிரதேசத்தில் பிரபல தொழிலதிபர் கைது!

தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் மாவனல்லை பிரதேசத்தில் பிரபல தொழிலதிபர் கைது!

கடந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (டிஐடி) நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் தாக்குதல்களுக்கு முன்னர் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் இளைஞர்களுக்கு தீவிரவாதம் தொடர்பான பல சொற்பொழிவுகளை நடத்தியதாக விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் ஹாஷிம் சார்பாக விரிவுரையாளர்களை ஏற்பாடு செய்து வழங்கியதற்காக மொத்தம் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாவனெல்லாவில் கைது செய்யப்பட்ட நபரும் இதுபோன்ற தீவிரவாதம் தொடர்பான சொற்பொழிவுகளில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர் மாவனெல்ல இணையவழி புடவை வர்த்தகத்தில் ஈடுபட்ட தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்காக கொழும்பில் உள்ள டிஐடி தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.