இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதியினை கொள்வனவு செய்ய இவ்வளவு போட்டியா?
advertise here on top
advertise here on top
happy kids fun world

இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதியினை கொள்வனவு செய்ய இவ்வளவு போட்டியா?

இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் கொத்தணி Sapphire Cluster கொள்வனவு செய்வதில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செல்வந்தர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர்.

குருந்தம் (வைரத்திற்கடுத்தபடியான கடினம் வாய்ந்த கனிப்பொருள்) வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலமணி - இரத்தினக்கல் எனக்கருத்த

ப்படும் இரத்தினக்கல் தொகுதி Sapphire Cluster , இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

510 கிலோகிராம் எடை கொண்ட Sapphire Cluster என்றழைக்கப்படும் இந்த இரத்தினக்கல் தொகுதி வீடொன்றிற்கு அருகில் கிணறு தோண்டும் போது கிடைத்திருப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்தது; இதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது.

கமகே என்பவருக்குச் சொற்தமான இந்த கல்லை, அவரது அனுமதியுடன் சீனாவில் விற்பனை செய்யவுள்ளதாகவும், சீனாவின் இரத்தினக்கல் ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த இரத்தினக்கல்லை அந்த ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.