எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படுமா?

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படுமா?

கடந்த மாதம் 11 ஆம் திகதி முதல் ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை சுமார் 10% உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பாக சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் சமீபத்தில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 16 ரூபாய் இனாலும் , ஒரு லிட்டர் டீசல் விலையை 14 ரூபாய் இனாலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியதாவது, கடந்த மாதத்தில் எரிபொருள் விலை அதிகரிக்காதது மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணமே என்று தெரிவித்தார்.

அந்தக் காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்திருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.