தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!

தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!

இன்று காலை 6 மணி முதல் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசத்தில் குடா வாஸ்கடுவ மேற்கு பகுதியே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும் இரத்தினபுரி மாவட்டம் கொலொன்ன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தாபனே கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து இன்று காலை 06 மணி முதல் விடுவிக்கப்பட்டன. (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.