தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!

தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!

மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (06) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில், யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் கீழுள்ள நாராந்தனை வட மேற்கு தம்பட்டி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸச பிரிவின் உயன்வத்தை மற்றும் உயன் வத்தை வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் தொடாங்கொடை பொலிஸ் பிரிவின் கீழுள்ள புஹாபுகொட கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் மலபடவத்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஏறாவூர் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (06) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.