ஹிசாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவு! பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

ஹிசாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவு! பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீக்காயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிசாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியின் இரண்டாவது விஷேட வைத்தியர்கள் குழுவினால் இன்று (31) முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் சுமார் 9.00 மணிநேரம் இவ்வாறு பிரேத பரிசோதனை இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது சிறுமியின் உடலின் பல்வேறு பாகங்களில் இருந்து பரிசோதனை மாதிரிகளை பெற்று இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அவற்றின் முடிவுகள் கிடைத்தவுடன் பிரேத பரிசோதனை அறிக்கையை வௌியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரையில் சிறுமியின் சடலம் பேராதெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.