
தனியார் மற்றும் அரச பஸ் சேவைகளை வருகின்ற ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையே மீண்டும் நடத்த அனுமதியளிப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
அலுவலக சேவை நேரங்களில் மாத்திரம் இந்த பஸ் போக்குவரத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்படும் என்றும் அவர் இன்று (29) கூறியுள்ளார்.