ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்சவின் பெயர் வர்த்தமானியில் சேர்க்கப்பட்டது!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்சவின் பெயர் வர்த்தமானியில் சேர்க்கப்பட்டது!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு சின்னம்) கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில்ர்ர் ராஜபக்சவின் பெயர் பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்சவின் பெயர் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளதாக அரசு அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நேற்று (06) தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கட்சியின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு  ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் தெரிவித்துள்ளார்.(யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.