இந்திய அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!

இந்திய அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையாம டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. 

நேற்று (29) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஏனைய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வௌியேறினர்.

இலங்கை அணி சார்பில் அதிரடி பந்துவீச்சில் ஈடுபட்ட வனிந்து ஹசரங்க 09 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அணித்தலைவர் தசுன் சானக 2 விக்கெட்டுக்களை வீழத்தினார்.

இதுவே இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 தொடர் வெற்றியாகும். மேலும் செப்டம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணி இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ளவுள்ளது. 

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.