
அவர் குறித்த தொழிற்சாலையில் தொடர்ந்து 18 மணி நேரம் வேலை செய்து வந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
Hwaseong Seobu பொலிஸ் நிலையத்தின் தகவலின்படி,
“இலங்கையைச் சேர்ந்த 33 வயதான தொழிலாளி ஜூலை 25 ஆம் திகதி அதிகாலை 3:30 மணியளவில் Hwaseong நகரத்தின் Paltan Township-இல் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் உயிரிழந்தார்.
அவர் இயந்திரத்தின் தட்டை மாற்ற முயற்சிக்கும் போது அதில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அருகிலேயே வேறு இரண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருந்தனர், ஆனால் பாதிக்கப்பட்டவர் அலறுவதைக் கேட்கும் வரை அவர்கள் இது பற்றி அறிந்திருக்கவில்லை” என்று தெரிவித்தனர்.
உடனடியாக நிலைமையை தொழிற்சாலையின் மேலாளரிடம் தெரிவித்து, 119 ஐ அழைத்துள்ளனர்.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர் ஒரு புதிய தொழிலாளி, மூன்று மாதங்களுக்கு முன்னரே தொழிற்சாலையில் சேர்ந்தார்.
உயிரிழந்த இலங்கையர் உட்பட, வெளிநாட்டுகளைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் தொடர்ச்சியாக 18 மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர்.
முந்தைய நாள் காலை 9 மணிக்கு தொடங்கி தொடர்ந்து 18 மணி நேரங்களுக்கும் மேலாக வேலை நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
உற்பத்தியில் குறைபாடு காரணமாக, தொழிற்சாலையில் சிக்கல் இருப்பதால், தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தொழிலாளர் சட்டங்களில் ஏதேனும் மீறல்கள் இருந்தனவா என்பதையும் அவர்கள் ஆராய்கின்றனர்.
தொழிற்சாலையில் பதிவுசெய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்வது உட்பட, எந்த வகையான முறைகேடுகள் காணப்படுகின்றன என்பதன் அடிப்படையில், தொழிற்சாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.