இதுவரை 04 மாவட்டங்களில் டெல்டா திரிபுடைய கொரோனா வைரஸ்!

இதுவரை 04 மாவட்டங்களில் டெல்டா திரிபுடைய கொரோனா வைரஸ்!

நாட்டில் மேலும் 14 பேருக்கு இந்தியாவின் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் டெல்டா வகை வைரஸ் தொற்றாளர்கள் 5 பேர் இனங்காணப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்தது.

கொழும்பு, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இருந்தே குறித்த டெல்டா திரிபு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

“வேகமாக பரவும் டெல்டா வைரஸானது இதுவரை தடுப்பூசி ஏற்றாதோருக்கும் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலானது” என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.