குறித்த கிரிக்கட் வீரர்கள் மூவருக்கும் நீண்ட கால சர்வதேச போட்டி தடை விதிக்கப்படலாம் - இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச அதிரடி

குறித்த கிரிக்கட் வீரர்கள் மூவருக்கும் நீண்ட கால சர்வதேச போட்டி தடை விதிக்கப்படலாம் - இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச அதிரடி

இங்கிலாந்தில் கொரோனா விதிகளை மீறிய மூன்று கிரிக்கெட் வீரர்கள் மீது இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“நம் நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாட்டை பிரதிநிதித்துவப்படுதுவதற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பையும் நேரத்தையும் முதலீடு செய்யலாம்.
இருப்பினும், நாட்டிற்காக ஒரு நோக்கத்திற்காக விளையாடாது மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது.
இந்த வரம்புகளை மீறும் கிரிக்கெட் வீரர்கள் மீது கிரிக்கெட் நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட கிரிக்கட் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோர் இங்கிலாந்திலிருந்து வீடு திரும்பியதுடன், கொழும்பில் ஒழுக்காற்று விசாரணையை எதிர்கொள்வார்கள்.

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து குறித்த மூன்று வீரர்கள் நீண்ட கால தடையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்றும், தற்போது அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிகளையும், இந்தியாவுக்கு எதிரான போட்டிகளையும் இழக்க நேரிடும் என்று சிரேஸ்ட இலங்கை கிரிக்கட் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

"இந்த தடையானது 3 மாதங்கள் முதல் 1 வருடம் வரை இருக்கும்" என்று சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.