கொரோனா தொற்றாளர்களுக்காக சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய புதிய திட்டம்!

கொரோனா தொற்றாளர்களுக்காக சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய புதிய திட்டம்!

'1390' எனும் துரித தொலைபேசி இலக்கத்தினூட மூலம் தனிமைப்படுத்தப்படும கொரோனா தொற்றாளர்களுக்கு உதவும்  பராமரிப்பு திட்டம் இன்று (28) தொடங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பிரதேச மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நோயாளிகள் வகைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அறிகுறியற்ற அல்லது மிகக்குறைந்த அளவிலான அறிகுறிகள் தொற்றாளர்களின ஆபத்து நிலை, வீட்டில் தங்குவதற்கான திறன் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள நிலைமை ஆகியவற்றை உள்ளடங்கியதாக, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் வரை அவர்கள் வீடுகளில் வைக்கப்படுவார்கள்.

மேலும் அவர்கள் விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவினரால் தினமும் தொலைப்பேசியினூடாக கண்காணிக்கப்படுவார்கள்.

இத்திட்டம் களுத்துரை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வெகு விரைவில் மேல் மாகாணம் முழுவதும் விரிவாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன் பிற்பாடு அடுத்த மாவட்டங்களிலும் இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.