இலங்கை ஒரே நேரத்தில் இரு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது! -ஹனா சிங்கர்

இலங்கை ஒரே நேரத்தில் இரு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது! -ஹனா சிங்கர்


கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கடற்சூழல் மாசடைவு ஆகிய இரு சவால்களையும் இலங்கை ஒரேவேளையில் எதிர்கொண்டுள்ளது.


இதிலிருந்து மீள்வதற்கு அனைத்துத் தரப்பினரும் உதவ முன்வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் குறிப்பிட்டுள்ளார்.


உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, இலங்கையின் நிலை குறித்து ஹனா சிங்கர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.


அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,


"இலங்கை தற்போது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மற்றும் கடற்பரப்பில் ஏற்பட்ட அனர்த்தம் ஆகிய இரு சவால்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டிருக்கிறது.


இந்தப் பின்னடைவிலிருந்து இலங்கையர்கள் மீட்சி பெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.


அதேவேளை இந்த அனர்த்தத்தின் விளைவாகக் கடற்பிராந்தியத்திற்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்வதற்கும் அவற்றை சீர்செய்வதற்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அனைத்துத் தரப்பினரும் விரைந்து முன்வரவேண்டும" என தெரிவித்திருந்தார்.


-நா.தனுஜா


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.