அடுக்குமாடி கட்டிடத்தில் தீ; மொறட்டுவை பல்கலைக்கழக மாணவி பலி!

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ; மொறட்டுவை பல்கலைக்கழக மாணவி பலி!


மொறட்டுவை பல்கலைக்கழக மாணவி ஒருவர் சொய்ஸாபுர அடுக்குமாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்துள்ளார்.


அக்கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


மேலும் மொறட்டுவை நகராட்சி சபையின் தீயணைப்பு படை பிரிவு தீயை அணைத்துள்ளது.


குறித்த பல்கலைக்கழக மாணவி தன்னை தீ வைத்துக் கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இது தொடர்பில் மொறட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.